சான் பிரான்சிஸ்கோ படகு கட்டிடத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தியின் இந்த சிலைக்கு கூகுலி கண்களை பொருத்தியுள்ளனர். ஸ்லாட்கோ பொனோவ் மற்றும் ஸ்டீவன் லோவ் என்ற இரண்டு புகழ்பெற்ற சிற்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறத்தில் ஒளிரும் கண்கள் : குறும்புகரா நபர் ஒருவர் மகாத்மா காந்தியின் சிலைக்கு இருட்டில் ஒளிரக்கூடிய கூகுலி கண்களை பொருத்தியுள்ளனர். இரவு நேரத்தில் கண்களில் மட்டும் சிவப்பு நிறத்தில் ஒளிரும்படி இந்த கூகுலி கண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைரல் ஆகிவரும் புகைப்படம் : காந்தியின் சிலைக்கு கூகுலி கண்களை பொருத்தும் பொழுது அந்த குறும்புக்காரரை ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்த புகைப்படம் ரெட்டிட் (Reddit) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
சேட்டைக்கு எல்லையே இல்லையா? : இந்த புகைப்படத்திற்குப் பலரும் கேலியாகவும், கோபத்துடனும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதில் பலரும் கேளிக்கையாக இதை எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் உங்கள் சேட்டைக்கு எல்லையே இல்லையா? என்று ஆதங்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.
அதிக லைக் பெற்ற கமெண்ட் : நெட்டிசன்கள் பதிவு செய்த கமெண்ட்களில் ஒரு கமென்டிற்கு மட்டும் பலரும் லைக் செய்துள்ளனர். அதில் அவர் நிகழ்ந்த நிகழ்வை வேடிக்கையுடன் காந்தியை பெருமிதமடையச் செய்துள்ளார். சூப்பர் மேன் திரைப்படத்தில் சூப்பர்மேனிற்கு கண்களில் இதேபோல் ஒலியுடன் நெருப்பு வரும். அதேபோல் காந்தியும் ஒரு சூப்பர்மேன் தான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.




Post A Comment:
0 comments so far,add yours