(ரணா)

கண்டி மாவட்டத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தால் நடத்தப்பட்டு வந்த பெண் பிள்ளைகளுக்கான ஒரு வார கால ஆன்மீக வதிவிட பயிற்சி முகாம் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமில் 75 பிள்ளைகள் பங்கேற்றனர்.

சங்கத்தின் மகளிர் பொறுப்பாளர் சித்தாந்தரத்தினம் இளம்சைவ புலவர் சமூகஜோதி இராமர் அன்னலெட்சுமி தலைமையிலான வளவாளர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளுக்கு இந்துத்துவம் சார்ந்த சமய, கலாசார, பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கை முறைமை, அறிவியல், ஆரோக்கியம் மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகள், தலைமைத்துவ பயிற்சிகள் ஆகியவற்றை போதித்தார்கள்.

இப்பயிற்சி முகாமுக்கு அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற தமிழர் ஊடக மையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழு விசேட அழைப்பின் பேரில் கள விஜயம் மேற்கொண்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours