..
காரைதீவு  நிருபர் சகா


 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' எனும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும் அனைத்துத்தமிழ் அரசியல் கட்சிகளும் ஆர்வமுள்ள பொது அமைப்புகளும் பங்குபற்றும் கலந்துரையாடல் கூட்டமொன்று கிழக்குத்தமிழர் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இக்கலந்துரையாடல் கூட்டம்     13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 03.30 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலுள்ள கூட்டுறவுச் சங்க மண்டபத்தில்  கட்சியின் அல்லது  அமைப்பின் சார்பில் தலைவர்  செயலாளர் உட்பட மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாமலும் ஐந்துஉறுப்பினர்களுக்கு மேற்படாமலும் மேற்படி கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தருமாறு கேட்டுள்ளனர்.

இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தினூடாக 1987 இல் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பெற்றிருந்த வடக்கு கிழக்கு
மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பினொன்றின் ஊடாக 2007 இல் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர்
உருவாகியுள்ள கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் கள நிலையைக் கருத்தில் கொள்ளும்போதும்அண்மைக்காலமாகக் கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளின் அனுபவத்தின் அடிப்படையிலும் வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு ஒரு பொதுவான அரசியல் சமன்பாடு பொருந்தாது என்பது அறிவுபூர்வமாக உணரப்பட்டுள்ளது.


அதாவது வடக்கு மாகாணத்திற்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தமாட்டாது என்கின்ற
அரசியல் யதார்த்தத்தின் பின்னணியில் கிழக்கில் செயற்படுகின்ற அனைத்து தமிழ் அரசியற்கட்சிகளையும்
புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் ஊடாக ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைத்ததோர் 'அரசியல் கூட்டணி'யை
 உருவாக்கும் முயற்சியின் விளைவாகக் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் 'கிழக்குத்தமிழர்கூட்டமைப்பு' எனும் அரசியல் கூட்டணி ஏற்படுத்தப்டப்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பின் தொடரவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தல் மாகாணசபைத்தேர்தல்களில் கிழக்குத்தமிழர்கள் கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒன்று திரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்ப வேண்டிய
தேவை எழுந்துள்ளது. 

எனவே யார் துரோகி? யார் தியாகி? எந்தக்கட்சி பெரியது? எந்தக்கட்சி சிறியது?;;
எந்தக்கட்சிக்கு வாக்குவங்கி உண்டு? எந்தக்கட்சிக்கு வாக்குவங்கி இல்லை? என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் பகைமுரண்பாடுகளைக் களைந்து அனைவரும் மக்களுக்காக ஒன்றிணைவதை நோக்கமாகக் கொண்டும் ஏற்கெனவே ஏற்படுத்தப்
பெற்றுள்ள 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' எனும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும் அனைத்துத்
தமிழ் அரசியல் கட்சிகளையும் அதன்தலைவர் த.கோபாலகிருஸ்ணன் கேட்டுள்ளார்.

  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours