(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் 3ம்கட்டமாக 326பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக நியமித்தல்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளை மூன்றாம் கட்டமாக பட்டதாரிகளை பயிலுனராக இணைத்துக்கொள்வதற்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை(18)அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
2012,2013ஆண்டுகளில் தமது உயர்கல்வி ரீதியாக பட்டத்தை  பூர்த்தி செய்த வெளிவாரி பட்டதாரிகளுக்கே இவ்வாறு பட்டதாரி பயிலுனர்களாக இணைப்பதற்கான உத்தியோகபூர்வமாக நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 326பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் நாளை செவ்வாய்க்கிழமை  முதல்(17)தங்களின் வதிவிடத்தை பிரநிதிப்படுத்தும் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பார்வையிடலாம்.இவ்விடயமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 

 முகவரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு கடிதம் கிடைக்காதவர்கள் குறித்த பிரதேச செயலாளரிடம் விரைந்து சென்று தமது பெயரை உறுதிப்படுத்திய கடிதத்துடன் அலரிமாளிக்கைக்குச் செல்ல முடியும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours