(த.தவக்குமார்)
தியாக தீபம் திலிபனின் 32ம் ஆண்டு நினைவினை நினைவுகூறும் முகமாக ஐனநாயகப் போராளி கட்சியினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து நடத்திய நிகழ்வு கட்சியின் ஊடகப்பேச்சாளர் சாந்தன் தலைமையில் கணேசபுரம் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தியாக தீபம் திலிபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபங்கள் ஏற்றப்பட்டது.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் துரைராசசிங்கம்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா,பிரசன்னா இந்திரகுமார்,பிரதேச சபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தியாக தீபம் திலிபன் அவர்களை நினைவு கூறிய பேச்சுக்களும் இடம் பெற்றது.













Share To:

Post A Comment:

0 comments so far,add yours