(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு 355பேர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் 355 செயற்திட்ட உதவியாளர்கள் பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் 355 செயற்திட்ட உதவியாளர்கள் மாவட்ட செயலகத்திற்கு நேற்றையதினம்(23)இணைக்கப்பட்டதை யடுத்து அவர்களை உத்தியோகபூர்வமாக மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களுக்கும் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பெயர்பட்டியலின் பிரகாரம் அவர்களை பிரதேச செயலகங்களுக்கு கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செயற்திட்ட உதவியாளராக நியமிக்கப்பட்ட அனைவரும் செப்ரெம்பர் 18க்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Post A Comment:
0 comments so far,add yours