மட்டக்களப்பில் 732 கோடியே 40இலட்சம்ரூபா நிதி ஒதுக்கீட்டின்  6130 திட்டங்களுக்கானஅபிவிருத்திப்பணிகளின்நடைபெறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் விசேட கூட்டம் இன்று மாவட்ட இணைப்புக்குளுவின் இணைத்தலைவர்களான ராஜாங்க அமைச்சர் அலிசாகிர்மௌலானா ,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.ஜீ.ஸ்ரீநேசன்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இவ்வருடம் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள்,,மீள்குடியேற்ற,திறன் அபிவிருத்தி ,வட மாகாணஅபிவிருத்திமற்றும் இளைஞர்விவகார அமைச்சின் அங்கீகாரத்தில்இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 732கோடியே 40இலட்சம்ரூபா நிதி ஒதுக்கீட்டின் 6130திட்டங்களுக்கானஅபிவிருத்திப்பணிகளின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டதுடன் திட்டங்களை பூர்த்திசெய்ய எதிர்நோக்கும் தடைகளுக்கான தீர்வுகளும் முன்மொழிவு செய்யப்பட்டன
இதன்படி தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள்,,மீள்குடியேற்ற அமைச்சின்மூலம் 182கோடி ரூபாவும்,தேசிய நல்லிணக்க அர்சகருமமொழிகள்,சமூகமுன்னேற்ற மற்றும் இந்து கலாசாரவிவகார அமைச்சு14 கோடியே 4௦ இலட்சம்ரூபாவும் மற்றும் நகரதிட்டமிடல்,நீர்வழங்கள்அமைச்சு,மாநகர அபிவிருத்தி,அமைச்சு,உள்நாட்டலுவல்கள் அமைச்சு,சிறுவர் அபிவிருத்தி,பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு,ஜனாதிபதிசெயலகம் கிழக்கு மாகாணசபை என்பனவும் இம்மாவட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீட்டைசெய்துள்ளன

இம்மாவட்ட அபிவிருத்தியில் கல்வி,சுகாதாரம், மின்சாரம் ,குடிநீர், விவசாயம்,கால்நடை அபிவிருத்தி,,வீடமைப்பு,வீதியமைப்பு,உள்ளக வீதிபுனரமைப்பு பணிகளுக்ககே நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாலேந்திரன் கலந்து கொண்டு மாவட்ட அபிவிருத்திகூட்டத்தின் இணைத்தலைவர்களாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருப்பதனை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளியேறினார்.இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஜனாதிபதியினால் நியமிக்கும் பதவிகளை தவிர்க்க அரச அதிகாரிகளால் முடியாத விடயமென தெரிவித்தார்.
ராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா கருத்து வெளியிடுகையில் ஜனாதிபதியின்நியமனங்களைதடுப்பதாயின் நீதிமன்றத்தால் மாத்திரமே முடியுமென தெரிவித்தார். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours