(எஸ்.குமணன்)

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் மாணவி மரணம்.  கதிர்காமத்தம்பி வீதி  நடேஸ்வரராஜன்அக்ஸயா (16) வயது மாணவியே இன்று சனிக்கிழமை (7) மரணமடைந்துள்ளார். 

 குறித்த மாணவியின் சகோதரர்  இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து  அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனைத்தொடர்ந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.


காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.போ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours