(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகட்கப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பிலிருந்து கரவெட்டி முள்ளாமுனை சமுர்த்தி வங்கிக்கு கடமைக்குச் சென்ற இரு பெண் உத்தியோகத்தர்களே இவ் விபத்தில் காயமடைந்தவர்களாவர்.



குறித்த இருவரும் வவுணதீவு ஆயித்தியமலை பிரதான வீதியால்  மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவேளையில் மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்ததில் இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்த இருவரையும் 1990 சுவசெரிய  அம்புயுலன்ஸ்  மூலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours