பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி AM. றகீபிற்கு “தாறுஸ்ஸபா” அமைய நிர்வாகிகள்  கௌரவித்தனர்.

தாறுஸ்ஸபாஅமையத்திற்கு சனிக்கிழமை(14)   விஜயம் செய்த முதல்வரை  அமைப்பின் நிர்வாகிகள்  வரவேற்று  பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன்  அவர்களுடன் பிராந்திய அபிவிருத்தி சமூக உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் தாறுஸ்ஸபா அமையம் அமைந்திருக்கின்ற கல்முனை மத்றஸா வீதி முதலாம் குறுக்கில் மின்விளக்கற்ற நிலை காண்பிக்கப்பட்டது. அதற்கான தீர்வை உடனடியாக செய்து தருவதாக முதல்வரால் வாக்குறுதியளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் தாறுஸ்ஸபா அமைப்பின் தவிசாளர் உஸ்தாத் சபா முஹம்மத், சிரேஷ்ட ஊடகவியலாளர் AJM. சமீம், பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் AL. நயீம் , மருந்தகர் அல்ஹாஜ் AL. ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours