(கே.கிலசன்)
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை பழுகாமம் கமநல சேவைகள் நிலையத்தில் வைக்கோல் எரியூட்டலை தடுத்தலும் சேதனைப் பசளையாக பாவித்தலும் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றது.
பழுகாமம் விவசாய போதனாசிரியரின் ஏற்பாட்டில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலியுகராஜ் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர். வயல் நிலங்களில் வைக்கோலை எரியூட்டவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் வைக்கோலை சேதனப் பசளையாக பயன்படுத்துவது தொடர்பாகவும் செய்முறை ரீதியாக விளக்கமளிக்கப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours