(எஸ்.குமணன்)

அம்பாறை மாவட்டத்தில்  நிந்தவூர் பகுதியில் திங்கள் (2)அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு  யானைகள் திடிரென  நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் உணவுகளை முற்றாகச் சேதப்படுத்தியுள்ளன.அத்துடன்  தென்னை மரங்கங்கள் வாழை மரங்கள் என்பவற்றையும்   பிடுங்கி வீசியுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலை தொடருமானால் சொத்துக்களுக்கு சேதங்களும் அழிவுகளும் ஏற்படும் .இது விடயத்தில் பிரதேச செயலாளர்  உட்பட் அதிகாரிகள்  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும் என சுட்டிக்காட்டுகின்றனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours