ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
அந்தவகையில் இலங்கை சோசலிச கட்சியின் அஜந்த பெரேரா மற்றும் இரு சுஜேட்சை வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெடகொட மற்றும் எஸ்.அமரசிங்க ஆகியோரே (வியாழக்கிழமை) கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளதுடன் எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours