(காரைதீவு நிருபர்சகா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான அறநெறிவிழா நேற்று(21)சனிக்கிழமை மட்டக்களப்பில் திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
;; அது சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தை சென்றடைந்ததும் இ.கி.மிசன் மட்டு.பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மஹராஜ் சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரதமஅதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதமஅதிதியாகக்கலந்து சிறப்பித்தார்.
சிறப்பதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருமலை உதவிஅரசாங்க அதிபர் வி.பிரதீபன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா குச்சவெளி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரி.மதியழகன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
கௌரவஅதிதியாக கல்விஅமைச்சின் முன்னாள் மேலதிகசெயலாளர் உடுவை தில்லைநடராஜா கலந்துகொண்டார்.
அங்கு அறநெறிககல்விக்;கொடிதின நிகழ்வு அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் நிகழ்வு அறநெறிஆசிரியர்பயிற்சியைபூர்த் திசெய்த இரண்டாம்கட்ட ஆசிhயர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.











Post A Comment:
0 comments so far,add yours