(காரைதீவு  நிருபர்சகா)


நல்லாட்சிஅரசில் சகலதுறைகளும் பொதுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றன. குறிப்பாக கல்வித்துறை மறுமலர்ச்சி என்பது அபரிதமானது. அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை எனும் இத்திட்டம் இலங்கை வரலாற்றில்  ஒரு மைல்கல் எனலாம்.இது மெச்சத்தக்கதாகும்.


இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தெரிவித்தார்.



கல்வியமைச்சின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின்கீழ் சம்மாந்துறைவலய மல்வத்தை புதுநகரம் அ.த.க.பாடசாலையில் நிருமாணிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையத்திறப்பு விழாவில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இத்திறப்புவிழா நேற்று(10)  செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் தலைமையில் நடைபெற்றது. 



இத்திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எச்.எம்.ஜாபீர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்..



அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் பேசுகையில்:
அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை எனும்திட்டம் இந்த நாட்டின் கல்வித்துறைவரலாற்றில் ஒரு முக்கியமைல்கல் எனலாம். இதனால் எத்தனையோ பின்தங்கிய பாடசாலைகள் பயன்பெற்றுவருகின்றன.
நல்லாட்சிஅரசில் விவசாயம் நீர்ப்பாசனம் வீதிஅபிவிருத்தி கல்வி சுகாதாரம் மற்றும் இன்னோரன்ன துறைகள் அபிவிருத்திகண்டுவருகின்றன.


ஊடகத்துறை முன்னொருபோதுமில்லாதவகையில் சுதந்திரத்துடன் செயற்பட்டுவருகிறது. அன்று ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுதமுடியாத நிலை. ஆனால் இன்று மிகவும் சுதந்திரமாக எழுதுகிறார்கள். விமர்ச்சிக்கிறார்கள். ஆனால் சிலவேளை வரம்புமீறியும் செல்கிறது.


யுத்த்த்தால் பாதிக்கப்பட்ட பகுதி இது.பல அடிப்படைத்தேவைகள் உள்ளன. அவற்றை படிப்படியாக தீhத்துவைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்பாடசாலை புலமைப்பரிசில்பரீட்சையில் கணிசமானளவு பெறுபேற்றை வருடாந்தம் வெளிக்காட்டிநிற்பதாக பணிப்பாளர் சகா சொன்னார். உண்மை.அதற்காக உழைத்த அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களைப்பாராட்டுகிறேன். அச்சாதனை தொடரவேண்டும்.என்றார்.



சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பேசுகையில்:
இன்று இப்பாடசாலை வரலாற்றில் பொன்னானநாள். இங்கு திறந்துவைக்கப்பட்டிருக்கும் இரண்டுமாடிக்கட்டடம் இங்குள்ள மாணவர்க்கு இன்னும் 50வருடங்களுக்கு போதுமானது.
எமதுவலயத்திற்கு கிடைத்த 3 ஆரம்பகல்விகற்றல்வளநிலையங்களில் ஒன்று சம்மாந்துறை அல்ஹம்றாவிலும் மற்றது இறக்காமம் லீடர்யூனியரிலும் மற்றது இங்கும் நிருமாணிக்கப்பட்டுதிறந்துவைக்கப்பட்டுள்ளன.
ஒழுக்கம் தவறியவர்கள் கற்றவர்களாகார். எனவே ஒழுக்கத்துடனான கல்வியைப்பெற்று மனிதனாகவாழப்பழகவேண்டும்.என்றார்.



1கோடி 60லட்சருபா செலவில் இவ் ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையம் நிருமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours