(த.தவக்குமார்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட தகறாற்றினால் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
இரு தரப்பினருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்த நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மு.கிருபைராசா தனது வீட்டு வளவில் மயக்கடமைந்திருந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். இன்நிலையில் மரணமடைந்துள்ளவரின் குடும்பத்தினர் குறித்த நபர் கற்களால் வீசப்பட்டும் தாக்கப்பட்ட நிலையில் மயக்கமுற்று மரணமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.பின்னர் சந்தேகத்தின் பெயரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிருபைராசா என்பவர் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகறாற்றினால் கொலை செய்யப்பட்டரா அல்லாது திடீர் மரணமடைந்தாரா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாவையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours