(க. விஜயரெத்தினம்)
வடகிழக்கு தமிழ்மக்கள் அபிவிருத்தியை காண்பதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என  அமைச்சர் அமீரலி தெரிவிப்பு.

வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் 5வருடத்திற்கு ஒருமுறை பரீட்சை எழுதி தோல்வியடைகின்றார்கள்.இதனை தமிழ்மக்கள் இன்னும் உணர்ந்து செயற்படவில்லை.இதனை சகோதர 
முஸ்லிம் சமூகத்தை பார்த்து அரசியல் செய்யுங்கள்  என் எம்.எஸ்.எம் அமிர் அலி தெரிவிப்பு.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தில்  தையல் தொழில் பயிற்சி நிலையம் திறப்பு விழா (22) நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே  விவாசாய நீர்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமிர் அலி இவ்வாறு தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தில் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழாவானது இணைப்பாளர் கண்னண் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன், கண்னகி அம்மன் வித்தியாலய அதிபர் பத்மநாதன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் 16 யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  ஆறு லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நான்கு வருடங்களாக பாராளுமன்றில் அமைச்சுப்பதவிகளோடு பல சேவைகளை நான் வழங்கியிருக்கின்றேன். ஆனால் இன்றுதான் என்னை இப்பிரதேசத்திற்கு  அழைத்திருக்கின்றீர்கள்.
தீர்வு தீர்வு என்று எத்தனை காலமாக தமிழ்மக்களை வைத்து தமிழ்த் தலைமைகள் காலத்தை கழிக்கின்றார்கள். அபிவிருத்தியை காண தமிழ்மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழ்மக்களின் அபிவிருத்திப்பசியை போக்குவதற்கு தமிழ்த்தலைமைகள் முன்வரவேண்டும்.தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. தமிழ்மக்களாகிய நீங்களும் சரி,உங்கள் 
பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஏமாறத்தான் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள்.இனியும் தமிழ்மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக அனைவரும் வினைத்திறனுடன் செயற்படவேண்டும்.படித்த இளைஞர்கள்,யுவதிகளுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் ,அபிவிருக்கள் கிடைக்க வேண்டுமானால் ஆளும்கட்சியை ஆதரித்து கொள்ளவேண்டும்.அமைச்சுப்பதவியை ஏற்று தமிழ்மக்களை வாழவைக்க தமிழ்த்தலைமைகள் முன்வரவேண்டும்.

வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் ஐந்து வருடத்திற்கு ஒருதடவை பரீட்சை எழுதி தேல்வியடைகின்றீர்கள். எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படுங்கள். முஸ்லிம்கள் தமிழர்களின் அரசியலை
கண்டு வளந்தவர்கள்.இன்று அவர்களின் அபிவிருத்தி வாக்குறுதிக்கு ஏற்ற வகையில் நடைபெறுகின்றது. முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியில் விருத்தியடைந்துள்ளது
எனவே நீங்கள் சிந்தித்து செயற்படுங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள் என கருத்துரைத்தார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours