கிழக்கு மாகாணத்தில், தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதற்கு சகல தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேட்டுக்கொண்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு, கல்குடாத் தொகுதிக் காரியாலயம், கிரானில் இன்று (08)  திறந்துவைக்கப்பட்டது.
அம்முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் தெய்வநாயகம் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக காரியாலத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அவர் இங்கு ​தொடரந்து உரையாற்றுகையில், படைத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்து, தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டாபயவுக்கு ஏன் வாக்களிக்க முடியாதெனக் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததன் காரணமாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி பிரதேச சபைகள் தங்களது கட்சியின் ஆதரவுடனேயே உள்ளதாகவும் தாங்கள் விலகினால் ஆட்சி கவிழ்ந்துவிடுமெனவும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours