( சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி இடம்பெற்ற மின் சூறாவளி தாக்கத்தில் சேதமடைந்த வீடுகளுக்காக நஸ்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இன்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
இவ் அனர்த்தத்தில் ஆயித்தியமலை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 27 வீடுகளும், ஆயித்தியமலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு வீடும், நெடியமடு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு வீடுமாக 29 வீடுகளுக்கு பகுதி சேதம் ஏற்பட்டது. இதற்காக நஸ்டஈட்டுக் கொடுப்பனவுகள் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மாவட்ட அனர்த்த உத்தியோகத்தர் சயந்தன், மண்முனை மேற்கு பிரதேச செயலக தேசிய அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours