(த.தவக்குமார்)
எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜீத் பிரரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக தெரிவு செய்திருப்பது  நல்தோர் விடயம் இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனங்கள்,இளைஞர் முன்னணி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களும் வரவேற்கின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி இன்று தனது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நடைபெறவிருக்கின்ற இத்தேர்தலில் சஜீத் பிரரேமதாச அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சரித்திரம் காணாத அதிகமான வாக்குக்களை பெறுவார் அதிலும் பட்டிருப்பு தொகுதியில் அதிகமான வாக்குக்கள் அவர் பெறுவார் என்றும் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை இனம் கண்டு வீட்டுத்திட்டங்களை மக்களின் தேவை கருதி பெற்றுக்கொடுத்துள்ளார்.இதனால் மக்கள் இவரை வெற்றி பெறச்செய்வார்கள்.அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்னைக்கான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை ஏற்படுத்துவார் என தெரிவித்தார்.



Share To:

Post A Comment:

0 comments so far,add yours