(சா.நடனசபேசன்)
கல்முனை கல்விவலயத்திற்குட்பட்ட கல்முனை தமிழ் கல்விக்கோட்டத்திற்கான  கோட்டக்கல்விப் பணிப்பாளராக பாண்டிருப்பைச் சேர்ந்த எஸ்.சரவணமுத்து இன்று 2 ஆம்திகதி திங்கட்கிழமை  கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளராக சிறப்பான முறையில் கடமையாற்றியதுடன்  4 ஆம் கிராமம் வாணி மகாவித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் புவனேந்திரன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours