(சா.நடனசபேசன்)
சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட நிருவாகசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி  சுவிஸ் நாட்டின் வேர்ன் நகரில் அமைந்துள்ள சுவிஸ் அமைப்பின் அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் ரி.சுதர்சன் தலைமையில்  நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பினது 15 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கொடுப்பனவு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
எதிர் வரும் மாதம் 20 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற ஆண்டு விழாவினை சிறப்பாக நடாத்துவது தொடர்பாகவும் இவ்விழா வேர்ன் நகரில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷேட நிருவாகசபைக் கூட்டத்திற்கு செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் க.துரைநாயகம், உபதலைவர் கே.தியாகராஜா,உபசெயலாளர் எஸ்.சுபாஸ்கோ, உபபொருளாளர் வி.பேரின்பராஜா மற்றும் நிருவாகசபை உறுப்பினர்களான பி.எட்வட்சிறிதர் ,பி.ஜெயதரன்,எஸ்.வரதராஜன் அத்தோடு சிறப்பு  உறுப்பினராக தி.கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours