(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் சந்தித்து கலந்துரையாடினார்.



முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை  திங்கட்கிழமை(9) மட்டு சிறைச்சாலையில் சந்தித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் சேர்ந்து எவ்வாறு அரசியலை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.

இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours