(க.விஜயரெத்தினம்)
தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அனுப்பும் ஓட்டைப்பானை அரசியல் தமிழ்மக்களுக்கு ஒன்றும் தராது.அதனை உணர்ந்து தமிழ்மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட்டால்தான் எமது தமிழ்சமூகத்தின் இருப்பைத் தக்கவைத்து கொள்ளமுடியுமென கிழக்கின் இளைஞர் முண்ணனி தலைவர் கணேசமூர்த்தி-கோபிநாத் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துக் தெரிவிக்கையில் ..
இன்று எமது தமிழ் இளைஞர்கள்,யுவதிகள் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி தொடர்பாக என்னிடம் அன்றாடம் கதைக்கிறார்கள்.அவர்களுக்கு நான் கூறிய,கூறும் பதில் என்னெவென்றால் மட்டக்களப்பிலும்,கிழக்கு மாகாணத்திலும் இயலுமானவரை எமது மண்ணை சேர்ந்த திறமையானவர்களை வாக்களித்து அமைச்சராக்குங்கள்.நாம் கைப்பற்றும் அமைச்சின் மூலம் வேலைவாய்ப்பு,அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள்,யுவதிகள்,புத்திஜீவி கள்,ஊடகவியலாளர்களின் செயலில்தான் எமது இருப்பு உள்ளது.வெறும் பேச்சில் அல்ல.இதனை நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.இதனை இன்னும் தமிழ்சமூகம் உணர்ந்து செயற்படாமல் போனால் தமிழர்களின் பொருளாதாரம்,வேலைவாய்ப்பு,அபிவி ருத்தி என்பன கேள்விக்குறியாகி மாற்றுச் சமூகத்திடம் கையேந்தும் நிலைமை உருவாகியுள்ளது.தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுத்தான் தீர்த்துக்கொள்ளலாம்.இதனை எல்லாத்தமிழர்களும் உணர்ந்து செயற்படும் காலம் வந்துவிட்டது.
தர முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியமைக்கும் அரசாங்கத்துடன் இணைந்து பல அமைச்சுக்களை கையகப்படுத்தி தன்னுடைய முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், தேவைகள்,வேலைவாய்ப்புக்கள்,அபி விருத்தியை செய்து தமது முஸ்லிம் மக்களின் இன்னல்களை தீக்கின்றார்கள்.
சகோதர முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தமது சமூகம் பற்றி சிந்தனை இருக்கின்றது.முதலில் பாராளுமன்றம் சென்றால் எந்த அமைச்சில் வேலைவாய்ப்புக்கள்,வெற்றிடம் உள்ளது என பலரிடம் விசாரித்து அந்த அமைச்சுப்பதவியை பாரமெடுத்து பின்னால் உள்ள மக்களுக்கும்,தமது சமூகத்துக்கும் வேலை செய்வார்கள்.ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சை பாரமெடுத்து அங்குள்ள வெற்றிடங்களை தமது சமூகத்தினரை கொண்டு நிரப்பியுள்ளார்.அதேபோன்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தபோது பல வேலைவாய்ப்புக்களை தன்னுடைய சமூகம் சார்ந்து வேலைவாய்ப்புக்களை பெருபான்மையாக நிரப்பிருக்கின்றார்.அதேபோன்று முன்னாள் தேசிய நீர்வழங்கள் அமைச்சர் அதாவுல்லாவும் தமது முஸ்லிம் சமூகம் சார்ந்தவர்களை நாடுபூராகவும் அந்த அமைமைச்சில் உள்ள வெற்றிடங்களுக்கு வேலைக்கு நியமித்துள்ளார்.அதேபோன்று அமைச்சர் றிசாட் பதியுதீனும் தமது முஸ்ஸிம் சமூகத்திற்காக பாடுபட்டு உழைத்துள்ளார்கள்.
அவரும் அமைச்சுப்பதவியை பயன்படுத்தி தன்சார்ந்த சமூகத்தினர் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளார்.இதனால் சகோதர முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியிலும்,பொருளாதாரத் தில் பாரியளவு முன்னேற்றம் கண்டு வருகின்றது.இதனை அன்று அமைச்சர் அஸ்ரப் தூரநோக்கு சிந்தனையுடனும்,பாரிய திட்டமிடலுடனும் செயல்பட்டதால்தான் இன்று எம்முடைய முஸ்லிம் சமூகம் வளர்ச்சி கண்டிருப்பதாக முஸ்லிம் புத்திஜீவிகள் காதால் கதைப்பதை நான் கேட்டுயிருக்கின்றேன்.ஆனால் இவ்வாறான சமூகப்பற்றும்,எதிர்காலத்திட் டமிடலும் நம்முடைய தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடம் அறவே இல்லை.சாதரணமாக நமது தமிழ் சமூகத்தில் கடந்த யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எத்தனை ?,
யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் பெயர்ப்பட்டியலை கோரினால் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் பதில் இல்லையெனச் வாயைச் சப்புவார்கள்.இதைப்பற்றி கதைத்தால் துரோகி பட்டம் கிடைக்கும்.
கடந்த முப்பது வருட காலமாக தமிழ்மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய நம்முடைய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்துள்ளார்கள்.உணர்ச்சி அரசியலைவிட ஒன்றுமில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அனுப்பும் ஓட்டைப்பானை அரசியல் தமிழ்மக்களுக்கு ஒன்றும் தராது.அதனை உணர்ந்து தமிழ்மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட்டால்தான் எமது தமிழ்சமூகம் இருப்பையும்,நில,நிருவாக,அதிகா ரத்தையும் மற்றும் வேலைவாய்ப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.
இனியும் மாற்றான் அமைச்சு பதவியை எடுப்பதால் தமிழ்மக்களுக்கு வேலைவாய்ப்பு,அபிவிருத்தி பெறவாய்ப்பில்லை. நாம் ஒற்றுமையுடன் கைகோர்த்து தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு உனடியாக நிவாரணம் வழங்குவோம் எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours