வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே ஜே.வி.பியின் நிலைப்பாடு."
- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
"தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை இன்னமும் கீழ் மட்டத்திலேயே இருக்கின்றது. எல்லாவிதமான குறைபாடுகளும் அங்கு தலைவிரித்தாடுகின்றன.
தோட்டப்பகுதி மக்களையும் எமது சகோதரர்களாக ஏற்றுச் செயற்படுவதைவிடுத்து – அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
அம்மக்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு எந்தவிதத்திலும் போதுமானதாக இல்லை. வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல சமூக வாழ்க்கை நிலையும் (சமூக அந்தஸ்து) கீழ்மட்டத்தில்தான் உள்ளது.
கொழும்பில் பங்களாவொன்றில் வேலை செய்வதற்கு ஆள் தேவையெனில், தோட்டப்பகுதி பிள்ளையொன்று இல்லையா எனக் கேட்கின்றனர்.
ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதற்கு ஆள் தேவையெனில் தோட்டப்பகுதியிலிருந்து பையன் ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாதா எனக் கேட்கின்றனர்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு எங்கே சமூக அந்தஸ்து வழங்கப்படுகின்றது?
நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியும் அவர்களின் வாழ்க்கைநிலை கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மட்டுமல்ல அவர்களி சமூகநிலையையும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.
அவர்களும் இந்த நாட்டு பிரஜைகளே! அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது? அவர்களையும் இந்த நாட்டின் சம உரிமைகளை அனுபவிக்கின்ற மக்களாக அங்கீகரிப்போம்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே ஜே.வி.பியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க மாட்டோம்" - என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours