உறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Treffpunkt
WittigkofenJupiterstrasse 15 ,3015 Bern ,Switzerland எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது .இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் தலைமையில் இடம்பெற இருக்கின்றது
இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது கரோக்கி இசை மாலை பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு கலைஞர் கௌரவிப்பு சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன
மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட உள்ளன.
விழாவில் சிறப்புரையாற்றுவதற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவ் அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்
இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு ஐரோப்பியவாழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதிஷ்டலாபச் சீட்டில் கலந்துகொள்ளும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான தங்க ஆபரணங்கள் பரிசாக வழங்கப்ட இருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours