| x |
மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 219 ஆவது வருடாந்த திருவிழா – 2019 (20) நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா, புனித மரியாள் பேராலய பங்குத் தந்தை அருட்தந்தை சி.வி. அன்னதாஸ், திருத்தல நிர்வாகக் குரு அருட்தந்தை சம்சன் நிக்ஷன், அருட்தந்தை சாந்தன் இம்மானுவல் ஆகியோர் கூட்டத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
கூட்டுத்திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உள்ளிட்ட அடியார்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டிய திருச் சொரூப பவனி சனிக்கிழமை மாலை (19) நகரின் பிரதான வீதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours