(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு மாகாணத்தில் இம்முறை புலமைப்பரிசில்பரீட்சையில் 3726 மாணவர் சித்திபெற்றுள்ளனர். அவர்களில் 432பேர் எமது கல்முனை வலயத்தினர். அது 11.6வீதமாகும்.ஆதலால் முதலிடம். எமதுவலயத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் தனியொருபாடசாலை 94சித்திகளுடன் சாதனைபடைத்துள்ளதென்றால் அது கல்முனை பற்றிமா கல்லூரிதான். மனமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் பாராட்டுவிழாவில் உரையாற்றிய கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் புகழாரம் சூட்டினார்.
இணைப்பாடவிதான போட்டிகளில் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் விருதுகள் பெற்று சாதனை நிலைநாட்டிய மாணவர்களையும், அண்மையில் வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டும் நிகழ்வு இன்று (24) கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு தலைமையில் கல்முனை காா்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் இந்தோனேசியாவில் நடைபெற்ற இளங்கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வதேச போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை பெற்ற மாணவன் கி.முகேஸ்ராம், 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான மல்யுத்த போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தை பெற்ற மாணவன் ஹர்யன் மற்றும் தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவன் ஒரிங்ஸ்டன் ஆகியோர் மாலை அணிவித்தும், நினைவுச்சின்னம் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், தரம் ஐந்து பரீட்சையில் சித்திபெற்ற 94 மாணவர்களும் சான்றிதழ் வழங்கியும் பதக்கம் அணிவித்தும் பாராட்டப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்திபெற்ற பாடசாலைகளில் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை முதலிடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வடக்கு கிழக்கில் இருந்து ஊடகதுறையில் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி விருதினைப்பெற்ற சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா கௌரவிக்கப்பட்டாா். அத்துடன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவா்களும் கல்லூரி அதிபரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் தொடா்ந்து பாடசாலையின் ஆசிரியர்கள், அதிபர்களுக்கும் அவர்களின் சிறப்பான சேவைகளை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், கல்முனை தமிழ் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாஆகியோரும், இலங்கை மின்சாரசபை கல்முனை பிராந்திய பணிமனை உதவி அத்தியட்சகர் சம்மந்தன்,கல்விப்பணிமனை அதிகாரிகள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
அவர் மேலும் கூறுகையில்;:
வரலாற்றில் முறியடிக்கப்படமுடியாத தொடர்சாதனையை நிகழ்த்திவரும் பற்றிமாக்கல்லூரி மாணவர்கள் சர்வதேச தேசிய ரீதியிலும்சாதனை படைத்துவருவது எமது வலயத்திற்கு பெருமையளிக்கின்றது.
இந்தப்பாடசாலை அதிபர் அருட்சகோ. சந்தியாகுவின் சேவையை இந்தகல்விச்சமுகம் அங்கீகரித்திருக்கின்றது. ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு இந்தச்சாதனைகள் சாட்சிகளாகும்.
இங்குதோற்றிய 244மாணவர்களுள் 235பேர் 70க்குமேல் பெற்று சித்திபெற்றுள்ளனர். இது 96வீதமாகும். வெட்டுப்புள்ளிக்குமேல் 94பேர் பெற்று கிழக்கில் முதலிடம்பெற்று இமாலயசாதனையைச்செய்துள்ளனர்.
ஆசிரியர்களையும் சம்பந்தப்பட்டவர்கன் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.






Post A Comment:
0 comments so far,add yours