(சா.நடனசபேசன்)
வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 200 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்து இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்
சம்மாந்துறை கல்வி வலயத்தில் சம்மாந்துறை, நாவிதனவெளி;
இறக்காமம் ஆகிய கல்விக் கோட்டங்களில் சம்மாந்துறைக்கோட்டத்தில் 130 மாணவர்களும் நாவின்வெளி, இறக்காமக் ஆகிய கோட்டங்களில் 70 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
வலயத்தில் முதலாமிடத்தினை சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி ஆயிஸா கனீம் எனும் மாணவி 191 புள்ளி பெற்று சாதனை படைத்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்
அதேவேளை இச்சாதனைகளை நிலைநாட்டி கடந்த வருடத்தினை விட இவ்வருடம் வலயத்தில் அதிக மாணவர்கள் சித்தியடைய உதவிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவருக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours