காரைதீவு நிருபர் சகா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதை அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஶ்ரீலங்கா சு.க கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவித்ததை முன்னிட்டு காரைதீவு ஶ்ரீ.சு.க ஆதரவாளர்களும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி பட்டாசு கொளுத்தினர்.


காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயமுன்றலிலுள்ள யாழ்நூல் சந்தியடியில் ஸ்ரீல.சு.கட்சி காரைதீவு பிரதேச அமைப்பாளரும் முன்னாள உபதவிசாளருமான  எந்திரி  வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை காரைதீவு ஊருக்குள் உள்ள சுவர்களில் சஜீத் பிரேமதாசாவின் தமிழ்மொழியிலான போஸ்டர்கள் இரவோடிரவாக ஒட்டப்பட்டுள்ளன.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours