(த.தவக்குமார்)
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதுற்கு அனுமதி வழங்கக் கூடாதெனக் கோரிஇ இன்று (15) கவனயீரப்புப் போராட்டம் நடைபெற்றது.

மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான்இ உப்போடை வீதியில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள்  கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மயிலவெட்டுவான் வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10 பேர் உட்பட 25 பேருக்கு விசேட அனுமதி நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியுள்ளமையைக் கண்டித்து இந்தக் கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours