(காரைதீவு நிருபர் சகா )
கிழக்கு மாகாணம் கடந்த காலத்தைவிட இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் அமோக பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கிழக்குமாகாணத்தில் கடந்தாண்டு பெற்ற பெறுபேற்றின்படி 2565மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர். இவ்வாண்டு 3716மாணவர்கள் பெற்றுள்ளனர். 1151மாணவர்களால் அத்தொகை அதிகரித்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணம் கடந்தாண்டைவிட 55.51வீத வளர்ச்சியை அதிகரிப்பைக் காட்டுகிறது.
இச்சாதனை அதிகரிப்பிற்கு காரணமாகவிருந்த அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்களை நன்றியோடு தெரிவிக்கும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் சகல 17 கல்விப்பணிப்பாளர்களர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக உழைத்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பணிப்பாளர் மன்சூர் மாகாணத்தில் முதலிடம் பெற்ற சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணமட்டத்தில் பெறுபேற்றுசித்தி வீத அதிகரிப்பைப்பொறுத்தவரை சம்மாந்துறை வலயம் 109வீத அதிகரிப்பைக்காட்டி முதலிடத்தில் திகழ்கிறது.

Post A Comment:
0 comments so far,add yours