மட்டக்களப்பு மாவட்ட செயலகம் எதிர்வரும் (08.10.2019) ஆந் திகதி செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு நவராத்திரி விழாவினை கொண்டாடவுள்ளது. இவ் விழாவானது மாவட்ட செயலகத்தின் வளாகத்தினுள் மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.


மாவட்ட செயலகத்தினால் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போன்று இம் முறையும் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் சகலரும் இணைந்து சிறப்பான முறையில் ஒழுங்கமைத்து நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



வாணி விழாவினை முன்னிட்டு பல கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அத்தோடு பக்தி பாமாலை,சகலகலாவல்லி மாலை , போன்ற பண்ணிசை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்வுகள் அனைத்தும் அரசாங்க அதிபரின் ஆலோசனையின்படி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் அவர்களின் வழிகாட்டலில் சிறப்புற இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours