(எம்.ஏ.றமீஸ்)
சர்வதேச ரீதியில் ஒக்டோபர்-16 ஆம் தி;கதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் உலக உணவு தினத்தினையொட்டி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ) இடம்பெற்றது.

அதிபர் ஏ.எல்.கமறுதீன் தலைமையில் 'ஆரோக்கியமான உணவு பசியற்ற உலகிற்கு' எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தின்போது பாடசாலையில் செயற்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முக்கிய பல வீதி வழியாகச் சென்று பின்னர் பாடசாலையினைச் சென்றடைந்தது.

உயிர் வாழ்வதற்கு தேவையான உணவினை முறையாக பெற்றுக் கொண்டு அதனை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும், முறையற்ற உணவுப் பழக்க வழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலத்தினை மேற்கொண்டதோடு, இது தொடர்பில் மக்களை விழிப்புணர்வுப்படுத்தும் வகையில் கையேடுகளும் மக்களுக்காக விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர்-16 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 1945 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் ஐக்கிய நாடுகள் சபையினால் உணவு மற்றும் வேளான்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், இந்நாளில் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours