திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த தபால் ரயில் சேவை இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனகயா கடுகதி ரயிலின் இயந்திரம் உள்ளிட்ட 6 ரயில் பெட்டிகள் அவுக்கன உப ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று தடம்புரண்ட நிலையிலேயே இன்று (புதன்கிழமை) குறித்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் இன்றும் நிறைவு பெறாத நிலையில் உள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குறித்த தண்டவாளத்தில் ரயில் சேவைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours