(துதி)

இலங்கை உரோட்டரிக் கழகமானது கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாகபோலியோ தடுப்பு தொடர்பில் பல்வேறுகருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் தலைவரும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதல்பிரதி உபவேந்தரும் மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே..கருணாகரன் தெரிவித்தார்


உலக போலிய தினமான இன்றைய தினம் அவரால் வெளியிடப்பட்ட போலியோ இல்லாத உலகம் எனும்தொனிப்பொருளிலான ஆய்வறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 

ஓக்டோபர் 24ந் திகதி இன்று உலக போலியோ தினமாகும்போலியோஎனும் இளம்பிள்ளைவாத நோயினை உருவாக்குகின்றநுண்ணுயிர் வைரசுக் கிருமியை உலகிலிருந்து இல்லாதொழிக்க 1988ம் ஆண்டிலிருந்து எடுக்கும் முயற்சிகளும் வெற்றிகளும் சவால்களும் ஆற்றப்பட வேண்டிய செயற்பாடுகளும் இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனபோலியோ வைரசானதுதொற்றடைந்த உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஒருவர்மற்றையவருக்கு தொற்றுகின்றதுஇவ்வைரசானதுசிறுபிள்ளைகளின் முன்நாண் நரம்பு மண்டலத்தைதாக்குகின்றதுஇதனால் மார்புக்கூடு மற்றும் அவயவங்களுக்கானநரம்புகள் செயலிழக்க அவை இயக்குகின்ற மார்பு மற்றும் கைகால் தசைகள் செயலிழக்கின்றனஇதனால்சுவாசக்கஷ்டம் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளனகுறிப்பாக கால் தசைகளின் செயலிழக்கம் மூலமாக கால்களில்பாதிப்புஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகின்றதுஇது வாழ்நாள் பூராகவும் ஒருவரைப்பாதிக்கின்றது

கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பதாக சின்னம்மைஇனை ஏற்படுத்திய வைரசானது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது.அம்மைப் பால்கட்டல் ஏனும் நிர்ப்பீடனவழங்கல் மூலம் அவ்வைரசு அழிக்கப்பட்டதுஅவ்வாறே போலியோ வைரசுக்கும்எதிராக உடல் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடிய போலியோ சொட்டு மருந்தும் இதனை 5 வயதிற்கு உட்பட்டசிறுவர்களுக்கு கிரமமாக வாய்மூலம் வழங்குவதன் மூலம் போலியோ எனப்படும் இளப்பிள்ளைவாத நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் பல தசாப்த காலமாக இடம்பெறுகின்றது

போலியோ நோயினை உலகில் இருந்து முற்றாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தினை உலக சுகாதார நிறுவனம்1980களில் முன்னிலைப்படுத்தியதுகுறிப்பாக போலியோ வைரசு குறித்து ஆராய்ச்சிகள் பரம்பல் முறைகள் மற்றும்போலியோ சொட்டுமருந்து தயாரிப்பு போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளில் ஈடுபட்டபோது உலகளாவிய ரீதியில் இவற்றினை செயற்படுத்தவும் போலியோ சொட்டு மருந்தினை பிள்ளைகளுக்கு வழங்கவுமாக உலக நாடுகளின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகினபல்Nறு நாடுகளின் அரசாங்கங்கள் பாரிய நிதியுதவியினைச் செய்தஅதேவேளையில் உலகளாவிய தொண்டு நிறுவனங்களும் பங்களித்தனஇதில் சர்வதேச உரோட்டரியின் பங்களிப்பும்செயற்பாடுகளும் பாரியளவில் இருந்தமை கண்கூடுகடந்த 1979ம் ஆண்டிலிருந்து சர்வதேச உரோட்டரியானது தன்னைஅர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றது

உலகில் 126 நாடுகளில் உள்ள உரோட்டரிக் கழகங்களில் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் அங்கத்தவர்களாகியுள்ளனர்.அத்தோடு இளைஞர்களுக்காக உரோட்டரக்ட் கழகங்களும் பாடசாலை மாணவர்களுக்காக இன்டரக்ட் கழகங்களும்இயங்கும் ஓர் அமைப்பாக சர்வதேச உரோட்டரிஅமைந்துள்ளதுஉரோட்டரி மன்றம் எனும் நிதிய அமைப்பு உலகளாவியமனிதாபிமான செயற்பாடுகளுக்காக இயங்குகின்றது

போலியோ ஒழிப்பிற்கு நிதி சேகரிக்கும் முகமாக (Pழடழை Pடரளபோலியோ பிளஸ் எனும் முயற்சி கடந்த 1985ம்ஆண்டிலிருந்து கடந்த34 வருடங்களாக இயங்குகின்றதுஇதன்மூலம் உரோட்டரிக் கழகங்கள் உரோட்டரக்ட் மற்றும் இன்டரக்ட் கழகங்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனஅத்துடன் தனிப்பட்டநன்கொடையாளர்களும் இம்முயற்சியூடாகநிதி வழங்குகின்றனர்மற்றும் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சி எனும் திட்டத்தின் ஊடாக உலக சுகாதாரநிறுவனம் யுனிசெப் உள்ளிட்ட பல அமைப்புக்களுடன் கூட்டிணைந்து இயங்குகின்றோம்சர்வதேச உரோட்டரியின்இந்நிதிமூல முயற்சியின் உத்வேக செயற்பாட்டினை அவதானித்த உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசொப்ட்நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் எமது முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாகவும் போலியோ நோயினை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்பாட்டுக்காகவும் தனது நிதியத்தின் ஓர் உத்தரவாதமாக சர்வதேச உரோட்டரி சேகரிக்கும் நிதிக்குசமமான அல்லது மேலதிக தொகையையும் சேர்த்து வழங்கிக் கொண்டிருப்பது கடந்த பல வருட காலமாக எமதுபோலியோ ஒழிப்பிற்காக நிதிசேகரிப்பு செயற்பாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
மேற்கூறப்பட்டவற்றின் மூலமாக எமது உரோட்டரி இயக்கத்தினால் 1.3 பில்லியன் அமெரிக்கடொலர்கள் நிதிசேகரிக்கப்பட்டு போலியோ ஒழிப்பிற்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டதுஎமது சர்வதேச உரோட்டரியின் முக்கியசெயற்பாடுகளில் ஒன்றான போலியோ சொட்டு மருந்து வழங்குவதில் எமது ஈடுபாடு மிகவும் அபரிமிதமானதுநாடுகளின் சுகாதாரத் துறையினரோடு எமது அங்கத்தவர்களும் பங்குபற்றுவதுடன் அதிகஷ்டப் பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளுக்குவழங்கவென சொட்டு மருந்து மற்றும் ஆளணியினரின் போக்குவரத்திற்கு உதவுவதுடன் யுத்தம் உள்நாட்டுப் பிரச்சினைகாணப்படுகின்ற நாடுகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கலில் தங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டதும்கண்கூடுஇவ்வாறான எமது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் மற்றும் பங்கு பற்றுதலினாலும் நாடுகள் அரசுகள் மக்கள்சுகாதாரத் துறையினர் மற்றும் உலகளாவிய அமைப்பினரினாலும் கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிபயனளித்துள்ளதுஅண்மைய தரவுகளின் படி 99.9 வீதத்தினை அண்மித்ததாக போலியோ ஒழிப்பு உலகில்இடம்பெற்றிருக்கின்றதுஉலகளாவி ரீதியான அறிவிக்கப்பட்ட போலியோ நோயாளர் எண்ணிக்கையினை பின்வரும்அட்டவணை காட்டுகின்றது
வருடம்    எண்ணிக்கை
2013        416
2014        359
2015        74
2016        37
2017        22
2018        33  

இவ்வருடத்தில் அண்மைய தரவுகளின் படி போலியோ வைரசுக் கிருமியினால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் இரு நாடுகளில்இனம் காணப்பட்டுள்ளனர்இவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ளனர்தென்னாசிய நாடுகளில்இலங்கையே முதன்முதலாக போலியோ அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதுஇந்நிலை பிரகடனப்படுத்தப்படும் வரைஇலங்கையிலும் வருடா வருடம் 5 வயதிற்குற்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஓர் குறிப்பிட்ட நாளில் போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டதுஉள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சண்டையிட்ட தரப்பினரால் யுத்த நிறுத்தம்பிரகடனப்படுத்தப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கை நூறுவீதம் நடைபெற வழிவகைகள் ஏற்பட்டன.எமது நாட்டில் உள்ள (உரோட்டரி மாவட்டம் 3220) கழகங்களும் விசேட நிகழ்வுகளை நடாத்தியதுடன் ஆள்பல மற்றும்நிதியுதவி மூலம் இந்த சொட்டு மருந்து வழங்குதலை மேற்கொண்டோம்


இவ்வகையிலே இவ்வருடமும் உலக போலியோ தினம் நினைவு கூரப்படுகின்றதுஉலகில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கமேலும் செயற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளனஇவற்றுக்கான நிதி சேகரிக்கப்பட வேண்டியுள்ளதுஇந்த வகையிலேமட்டக்களப்பு உரோட்டரிக் கழகமானது கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கல்நிதிசேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பதாதை அமைத்தல் போன்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றோம்.  இவ்வருடமும் எமது இலங்கை உரோட்டரி மாவட்டமானது நாடளாவியரீதியில் பரந்திருக்கும் உரோட்டரிக்கழகங்களின் உறுப்பினர்களை இணைத்து இம்மாதம் 26ம் திகதி கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் விழிப்புணர்வுகூட்டம் பேரணி மற்றும் நிதிசேகரிப்பு ஆகிய நிகழ்வுகளை நடாத்துகின்றோம்இவ்வருட தொனிப்பொருளாக ஒருநாள் ஒரு முகநோக்கு போலியோவினை முடித்தல் எனும் வாசகம் அமைந்திருக்கின்றதுஎமது நாட்டிலிருந்து போலியோ நோயினைஇல்லாதொழித்தது போலவே உலகிலிருந்தும் இல்லாதொழிக்க நிதியுதவியும் பங்களிப்பும்அவசியமாகின்றதுபோலியோவினை உலகின் முகத்திலிருந்து இல்லாதொழிக்க ஒன்றிணைவோம் என்னும் கருப்பொருளில்போலியோ நோய் குறித்த மக்கள் விழிப்புணர்வும் உலகளாவிய போலியோ ஒழிப்புநடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பின்மு க்கியத்துவமும் அதனோடிணைந்த கருத்தாடல்களும் மக்கள் மத்தியிலேதொடர்ந்து இடம்பெறுவது அவசியமாகின்றதுஇவ்வாறு போலியோ நோயினை முற்றிலும் இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours