(த.தவக்குமார்)
இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழாவானது காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (07) பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளர் அவர்களின் திருக்கரங்களால் நந்திக் கொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து பஜனை நிகழ்வுகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
இதன்போது நவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத் திறனை வெளிப்படுத்தும் முகமாக கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல், நிறைகுடம் வைத்தல், சித்திரம் வரைதல்,கவிதைக்களம்இ பேச்சு, நடனம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
விழாவின் இறுதியில் பூஜை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.









Post A Comment:
0 comments so far,add yours