எஸ்.குமணன்
அம்பாறை
ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.
இதன் போது குறித்த வழக்கு தொடர்பில் நீதிவான் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் தவணையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக எடுத்து கூறி பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவிகள் திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தார்.
மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்த தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours