எந்த பேதங்களும் இன்றி நாட்டில் அனைவரும் அமைதியாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு பெறுமதியான பலவற்றை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டி வத்தேகமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.எமது எதிர்கால சந்ததியினர் வெட்கம் இன்றி வாழக் கூடிய வகையில் நாங்கள் நாட்டை உருவாக்கினோம். அனைத்தையும் விட நாங்கள் மக்களுக்கு வழங்கிய பெறுமதியான விடயம் அரசியலமைப்புச் சபை.இந்த அரசியலமைப்புச் சபை காரணமாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு பொலிஸ் மா அதிபரை கொன்று சாப்பிடும் அளவுக்கு ஆசை இருந்தாலும் அவரால் பொலிஸ் மா அதிபரை பதவியில் இருந்து நீக்க முடியவில்லை.

இவை தான் மக்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றி.இதன் பிரதிபலன்கள் மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கவிட்டாலும், இதன் மூலம் மக்கள் வாழக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது’ எனவும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours