(காரைதீவு நிருபர் சகா)
நாட்டில் இவ்வாண்டில் கடந்த சனிக்கிழமை வரை 73609டெங்கு நோயாளிகள்: இனங்காணப்பட்டுள்ளனர். எமது கல்முனைப் பிராந்தியத்தில் இன்றுவரை 740பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பு. எனவேபொதுமக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே ஒழிப்பு சாத்தியமாகும்.
இவ்வாறு கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் டெங்கு பரிசளிப்புவிழாவில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சுகாதாரசேவை பணிமனையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மற்றும் மாணவர்களைப்பாராட்டும் பரிசளிப்புவிழா நேற்று(28) வியாழக்கிழமை காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி; தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கௌரவஅதிதியாகக்கலந்துசிறப்பித் தனர்.
இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று டெங்கற்ற பாடசாலைகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காரைதீவுக்கோட்டத்திலுள்ள 10பாடசாலைகளும் இவ் டெங்கற்ற பாடசாலை பரிசோதனையின்கீழ் பரிசோதிக்கப்பட்டது. இதில் 3பாடசாலைகள் டெங்கற்ற பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டன.
முதலாம் இடத்தை காரைதீவு கண்ணகி இந்துவித்தியாலயம் பெற்றுக்கொண்டது. தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக இப்பாடசாலை முதலாமிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
டெங்கு தொடர்பில் மாணவரிடையே புத்தாக்கபோட்டியும் வீடியோ கிளிப் போட்டியும் நடாத்தப்பட்டன. அப்போட்டிகளில்முதல் மூன்று இடங்களைப்பெற்ற வெற்றியாளர்கள் பரிசுவழங்கிக்கௌரவிக்கப்பட்டனர் .
முதல் பரிசாக 5000ருபாவும் இரண்டாம் பரிசாக 3000ருபாவும் மூன்றாம் பரிசாக 2000ருபாவும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கப்பட்டன.
பணிப்பாளர் சுகுணன் மேலும் பேசுகையில்:
டெங்கு முழுநாட்டிற்குமே ஒரு சவாலாக காணப்படுகிறது. அந்த நோய்க்கு நாம் பலரை பலிகொடுத்திருக்கிறோம். அது ஆட்கொல்லி நோய்.
மழைக்குபின்னர் சடுதியாக எமது பிரதேசத்தில் இம்மாதத்தில் தாக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு நாம் தயார்நிலையிலிருக்கவில்லை என்றே கருதுகிறேன்.
இதுவிடயத்தில் எனது என்பதை விட எமது என்று நினைத்து தடுப்புவேலைகள நாம் செய்யவேண்டடும்.
மாணவர் மத்தியில்இதுதொடர்பான விழிப்புணர்வை எற்படுத்துவதனூடாக முழு வீடுகளுக்கும் அச்செய்திசெல்லும்.அதனூடாக நாடு காப்பாற்றப்படும்.
சுகாதார திணைக்களம் நாடளாவியரீதியில் டெங்குநோயைக் கட்டுப்படுத்தும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தைப் பரவலாக முன்னெடுத்துவருகின்றது.
அதன் ஓரங்கமாக இவ்வேலைத்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்து நோயைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம்காட்டி முன்னணியில் திகழும் நிறுவனங்கள் மாணவர்கள் பொதுமக்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கும் பரிசளிப்புவிழாவும் நடாத்தப்பட்டுவருகின்றன.




Post A Comment:
0 comments so far,add yours