மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை விவசாயிகள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் A..M.S சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக எருமத்தீவு பகுதியில் 780 ஏக்கர் நிலம் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது மொத்தம் 900 ஏக்கர்கள் விவசாயம் செய்யப்பட்டிருந்தது அதில் 780 ஏக்கர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக விவசாயிகள் கூறினர்.
பாதிப்பிற்கு உள்ளாகிய விவசாயிகள் விதைப்பு செய்து 17 நாட்கள் பயிரான நிலையில் தொடர்மழை ;காரணமாக நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours