இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் அன்னச்சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசியகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நாடாளுமன்ற குழு கூட்டங்களிலும் ஆராயப்பட்டிருந்தது.
இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம்.
Post A Comment:
0 comments so far,add yours