மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களிலும் 398301 வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது கல்குடா தேர்;தல் தொகுதியில் 22.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்று மட்டக்களப்பு தேர்;தல் தொகுதியில் 22.01 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்று பட்டிருப்பு தேர்;தல் தொகுதியில் 23.48 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டு மொத்தமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22.49 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இப் பதிவுகள் யாவும் 11.00 மணிக்கு முன்னர் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours