மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்குநுளம்பு தாக்கம் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில் கடந்தநவம்பர் 15ம் திகதிதொடக்கம்; 22 திகதி வரையும் 100 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்புமாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1519 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைபெற்றுவீடுசென்றுள்ளனர்;.

இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு பிரிவில் இதுவரை 39 டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது போன்று ஆரையம்பதி 14பேர்;; களுவாஞ்சிகுடி 07பேர் செங்கலடி,வவுனதீவு 10பேர் ஆகியபகுதியில்; இனங்காணப்பட்டுள்ளனர்.
மொத்தமாக கடந்தவாரம் 100 பேர் மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்புமக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்றகுப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காதவகையில் துப்பரவாகவைத்துகொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிபனையில் டெங்குகட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்தியகலாநிதிவே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours