மட்டக்களப்பில் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், மட்டக்களப்பு மாநகர பிரதேசத்திற்கு உட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஆரோக்கிய நிலையும் அதனை மேம்படுத்தலுக்குமான கலந்துரையாடல் வியாழக்கிழமை (21) மாநகர மண்டபத்தில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது

கலந்துரையாடலில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் முன்னிலை வகித்ததுடன் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதம பொது சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours