காரைதீவு நிருபர்
அரசியவாதிகள் எவரேனும் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அது எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் தொடர்ந்தேச்சையாக கிடைத்து வருகின்ற படுதோல்வியின் உச்ச கட்டமே ஆகும் என்று இத்தேர்தலில் போட்டியிடுகின்ற மக்கள் தேசிய இயக்கத்தின் வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரசார நடவடிக்கைகளுக்காக விஜயம் மேற்கொண்டு வந்து உள்ள இவர் இங்கு தமிழர் ஊடக மையத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு
எந்தவொரு யுத்தத்திலும் முதலில் சுட்டு வீழ்த்தப்படுகின்ற பொருள் உண்மையே ஆகும். இதை இராணுவத்தின் உயர்நிலை பதவிகளை வகித்தவன் என்கிற வகையில் நான் மிக நன்றாகவே அறிவேன். ஆனால் இந்த தேர்தல் யுத்தத்தில் போட்டியிடுகின்ற அரசியல்வாதிகள்ள் உண்மையை தினம் தினம் சுட்டு வீழ்த்தி சாகடித்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் அதில் ரெம்பவே பயிற்றப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நான் பொய்யை, அநியாயத்தை, அநீதியை சுட்டு வீழ்த்துபவனாக அவர்களிடம் இருந்து மாறுபட்டு நிற்கின்றேன்.
அவர்கள் குறுகிய சுய இலாப அரசியல் நோக்கங்களுக்காக மக்களையும் சேர்த்து கடந்த 70 வருடங்களாக சுட்டு சுட்டு வீழ்த்த மக்கள் செத்து பிழைத்து கொண்டே இருக்கின்றார்கள். இவர்களிடம் இருந்து மக்களை மீட்டு காப்பாற்றுவதற்காகவே நான் இத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.அரசியல்வாதி களிடம் இருந்து எமது மக்களை என்னால் நிச்சயம் காப்பாற்ற முடியும். உங்களுக்காக உங்கள் உதவியுடன் அவர்களை என்னால் தோற்கடித்து உங்களுக்கு பாதுகாப்பு தர முடியும்.
நீங்கள் எனக்கு அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வேட்டுக்களாக மாறி அவர்களை மண் கவ்வ செய்து விடும். நான் உங்களை பாதுகாக்கின்ற கவசமாக இருப்பேன்.
Post A Comment:
0 comments so far,add yours