•ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாயா இன்று 18/11/2019, பதவி ஏற்கிறார்.
•அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐ.தே.கட்சி வேட்பாளர் சஜீத்பிரமதாசா தோல்வியை தழுவினார் என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் 


கடந்த ஏழு ஜனாதிபதி தேர்தல்களிலும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் எவரும் முற்றுமுழுதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் மாவட்டங்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட வரலாறு இல்லை,


ஆனால் இந்த தேர்தலில் மட்டுமே 16,சிங்கள பெரும்பான்மை மாவட்ட மக்கள் எவருமே சஜீத்பிரமதாசாவை ஏற்கவில்லை இதற்கு என்ன காரணம்?
ஐ.தே.கட்சியை சேர்ந்த பிரதமர்,பல அமைச்சர்கள்,பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் 16, மாவட்டங்களிலும் இருந்தபோதும் அவர்களால் ஒருமாவட்டத்தை கூட முழுமையாக சஜீத் பக்கம் திருப்ப முடியாமைக்கு என்ன காரணம்,

வடக்கு கிழக்கு 5,மாவட்டமும்,நுவேரேலியா மாவட்டமும் தமிழ்பேசும் மக்கள்(ஈழத்தமிழர்,மலையகதமிழர்,இஷ்லாமியர்)அதிக அளவில் வாழும் மாவட்டங்களில் மட்டுமே சஜீத்பிரேமதாசாவை ஆதரித்தனர்.



சஜீத் பிரமதாசா வெற்றிபெறாமைக்கான காரணங்களாக நான் இதை பார்க்கிறேன்••••!



1) சாதியம் தொடர்பான மறைமுக பிரசாரம்.



2)பிரதமர் ரணில்மீது சிங்கள மக்கள் கொண்ட வெறுப்பு,



3) சஜீத்பிரமதாசாவின் தேர்தல் விஞ்ஞானம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட உண்மை கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு இனவாத பிரசாரமாக மாற்றப்பட்டது,



4) சஜீத் பிரமதாச பாதுகாப்பு அமைச்சராக இராணுவதளபதி சரத்பொன்சேகாவின்பெயரை முற்கூட்டியே அறிவித்தமை,



5)சில அமைச்சர்கள் பிரதமர் உட்பட பலர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களில் தமிழர் தரப்பு நேரடியாக கோத்தபாயாவை எதிர்த்து பிரசாரம் செய்தது போன்று சிங்கள அமைச்சர்கள் தமிழ்பகுதிகளில் பேசிய கருத்து சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.



6) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாஇறுதிநேரத்தில் சஜீத் பிரமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசிய விதம் சிங்கள பெருமான்மை மக்கள் ஏற்கவில்லை.



7)ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சஜீத் பிரமதாசாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக பிரசாரம் செய்யாமல் நழுவல் போக்கை கடைப்பிடித்தமை.



8)முஷ்லிம் கட்சிகள் முஷ்லிம் அரசியல் வாதிகள் பலர் சஜீத்துக்கு வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டமை.



9)சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி தாம் வெற்றிபெறுவேன் என கோத்தபாயா கூறி சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்ட பிரசாரம்.



10)ஐக்கியதேசியகட்சிக்குள் இருந்த உட்பூசல் இதனால் சஜீத்தை வெற்றிபெறவைக்கவேண்டும் என்பதைவிட தோல்வியடைய வைக்கவேண்டும் என்ற நிலை .



11)வேட்பாளராக தம்மை தியமிக்குமாறு ஏற்கனவே சஜீத்பிரமதாச மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை அவரின் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டமை.(கட்சியின் சம்மதம் இன்றி அவரின் பதவிக்காக ஆர்பாட்டம் செய்தமை)



12)இனவாதகடும்போக்குநிலை.



இந்த காரணங்களுடன் இன்னும் வேறு காரணங்கள் இருக்கலாம்.
பிரசார கூட்டங்களில் வரும் மக்கள் தொகையை மட்டும் பார்த்து யார் வெற்றிபெறுவார் என்பதை தீர்மானிக்க முடியாது என்பது மீண்டும் இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours