(க.விஜயரெத்தினம்))
தமிழர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்திசெய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.இ.சாணாக்கியன் தெரிவிப்பு.

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்திசெய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை(21) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் நீண்டகால யுத்தம் மற்றும் அரசியல் ரீதியான போராட்டங்களின் வெளிப்பாடுகளினால் இதுவரையில் தமது அரசியல் ரீதியான வெற்றியை பெறமுடியாத நிலையில் தமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை இந்த நாட்டு அரசுகள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.
ஓன்றுபட்ட நாட்டுக்குள் அனைத்து இன மக்களுடனும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதுடன், தமது பகுதியை தாமே ஆளவேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான அங்கீகாரத்தினையும் கோரிக்கையினையும் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த நாட்டில் ஆட்சிபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் புறந்தள்ளியே வருகின்றனர்.
இதன் காரணமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இந்த நாட்டில் ஆட்சிபீடம் ஏறும் ஆட்சியாளர்களில் தொடர்ச்சியாக அதிர்ப்திகொள்ளும் நிலையேற்படுகின்றது.
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியாக இந்த நாட்டின் தலைவர்களை தெரிவுசெய்யும் நிலையில், வெற்றிபெற்றதும் வெற்றிபெறும் ஆட்சியாளர்கள் தமிழர்களின் அபிலாசைகளை புறந்தள்ளியே செயற்படும் நிலையிருக்கின்றது.
எனவேதான் இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது தனித்துவத்தினையும் தமது எதிர்பார்ப்பினையும் இந்த தேர்தல் மூலம் இந்த நாட்டு பெரும்பான்மையினத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே புதிய ஜனாதிபதியாவது தமிழ் மக்களின் இந்த நீண்டகால நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் மக்களின் கோரிக்கையின் பலமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை மௌனிக்கும் நிலைக்கு கொண்டுவந்த ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்து அவர்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான உரிமையினை வழங்க முன்வரவேண்டும் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours