(துதி)
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.மோகன் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சி.கங்கேஸ்வரன் மற்றும் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியக் கலாநிதி இ.சிறிநாத், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ப.இளங்கோ, ஏறாவூர்ப்பற்று 02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் கா.ராமச்சந்திரன் உட்பட சக பாடசாலைகளின் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் கலைநிகழ்வுகள் பல சிறப்பாக இடம்பெற்றதுடன், 2018 ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள், இணைப் பாடவிதானச் செயற்பாடுகள், தமிழ் மொழிதினப் போட்டிகள் உட்பட ஏனைய போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள், சான்றிதழ்கள், சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வரதராஜன் அவர்களும் பாடசாலை அதிபரினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours