காரைதீவு  நிருபர் சகா


ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பட்ட சமகாலத்தில் சிறுபான்மையினம் அச்சத்துடன் வாழுகின்ற சூழ்நிலை எழுந்துள்ளது. சஜித்திற்கு வாகக்ளித்தமைக்காக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்பை புதிய ஜனாதிபதி உறுதிப்படுத்தவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குழாய்நீரிணைப்புக்கான காசோலை வழங்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனின் இணைப்பாளருமான காரைதீவுபிரதேச சபை உறுப்
பி
னருமான எ.ஜலீலின் முயற்சியில் காரைதீவில் வறுமைக்கோட்டின்கீழ்பட்ட 30தமிழ்க்குடும்பங்களுக்கு இலவசமாக குழாய்நீரி
இணைப்பை வழங்குவதற்கான 15லட்சருபா காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்களான எ.ஜலீல் மு.காண்டீபன் த.மோகனதாஸ் இ.மோகன் சி.ஜெயராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்;:
நாங்கள் சபையை பாரமெடுத்து 21மாதங்களாகின்றன. அதிகம் சேவைகளை செய்யலாம் என்றபலத்த ஆர்வத்துடன் வந்த உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. 20லட்சருபா கடனுடன் கடந்தசபை நிருவாகம் எம்மிடம் ஓட்டைக்குடத்தை ஒப்படைத்தது.
முன்னாள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றகாலத்தில் ஒவ்வொரு பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் தலா 50லட்சருபா தரப்படும் என்று முழங்கினார். 5ருபா கூட தரப்படவில்லை.
பல அமைச்சர்களுடன் போய் பேசினோம். திட்டங்களைக்கொடுத்தோம். த.தே.கூட்டமைப்பா என்றுகேட்டுவிட்டு துரத்தினார்கள். நகரஅபிவிருத்தி அமைச்சிடம் 3தடவை ஏறிஇறங்கினோம். ஒருசதமும் தரவில்லை.ஏமாற்றினார்கள். தமிழ்ச்சபை என்பதற்காக ஏகப்பட்ட புறக்கணிப்புகள்.

இனம் பார்த்து சேவை செய்யும் அமைச்சர்களை இனிமேல் நியமிக்கவேகூடாது. ஜனாதிபதி அமைச்சர்கள் தவிசாளர்கள் ஒருகட்சியை ஒரு இனத்தைச்சோந்தவர்களாவிருந்தாலும் பதவிக்கு வந்தால் அனைத்து இனங்களுக்கும் சேவைசெய்யவேண்டும்.

எனவே புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் சேர்ந்து மூவினமக்களுக்கும் சேவையாற்றக்கூடிய பரந்தமனப்பான்மையுடனான அமைச்சர்களை நியமியுங்கள்.
கோத்தபாயவிற்கு தமிழர்கள் இனரீதியில் வாக்களிக்காமல் விடவில்லை.அவர்மீதான  நியாயமான அச்சமே அதற்குக்காரணம். பெரும்பான்மையான தமிழர்கள் சிங்களவர்க்கே வாக்களித்தனர்.

நல்லாட்சி என்று வந்தவர்கள் தமிழ்மக்களை நடுத்தெருவில் அநாதையாகவிட்டார்கள். மஹிந்தராஜபக்ச கைதிகளை விடுதலைசெய்தார். ஆனால் மைத்திரி காலத்தில் அது மாறிவிட்டது.

இறுதியாக அமைச்சர் மனொகணேசனிடம் நான்சென்று உதவிகேட்டேன். அவர் 1கோடிருபா பெறுமதியான வீதிகளை தரவழிவகுத்தார். இன்று எல்ஈடி பல்புகளை போட 10லட்சருபா வழங்கினார்.

அப்படி இன்று மறுமதமாகவிருந்தாலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் எமது ஏழைமக்களுக்கு குழாய்நீரிணைப்பை வழங்க 15லட்சருபாவை வழங்குகிறார்.இதனையே எதிர்பார்க்கிறோம்.என்றார்.
உறுப்பினர் ஜலீல் உரையாற்றுகையில்;:
நாங்கள் முஸ்லிம் காங்கிரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட சமுகம். அக்கட்சிக்காக பல தியாகங்களைச்செய்தோம். பலனில்லை.

ஆனால்எங்கோபிறந்து அகதியாக இருந்தவேளை ஓலைக்கொட்டிலில் ஸ்தாபித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட்பதியுதீன் வந்தபிற்பாடு எமது மாவடிப்பள்ளிக்கிராமம் அபிவிருத்திகண்டது. அதன் ஓரங்கமாக காரைதீவு தமிழ்ச்சகோதரர்களுக்கும் உதவிசெய்யவாய்ப்புக்கிடைத்தமை மகிழ்சியதை;தருகிறது. என்றார்.
கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் எம்.ஹில்மியும்கட்சிதொடர்பாக பூரணவிளக்கமளித்தார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours